அரசியலில் ரஜினி - இதுவரை

அரசியலில் ரஜினி - இதுவரை
Published on

1992 அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தமிழகத் திரைத் துறையின் சார்பில், ஒரு பாராட்டு விழா. அந்த விழாவில், ஜெயலலிதாவின் முன்பாக இவ்வாறு பேசினார் ரஜினி, ``நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ... அதே நேரத்தில், ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போய்டும்" என்று அரசியலை வெறுத்தவர் போல பேசிய அவர், பின்பு ``அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்" என்று கூறினார்.

1995. பாட்ஷா பட விழாவில் தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி இருக்கிறது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் முன்னிலையிலேயே பகிரங்கமாக பேசினார்.

1996. இந்த தேர்தலில் ``ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’’என்ற அவரது குரலுக்கு பலன் இருந்தது.

1998. மக்களவைத் தேர்தலில் தி.மு.க--- -த.மா.கா கூட்டணிக்கு ரஜினி ஆதரவு தந்தார். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.

2001.  மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதாவை சந்தித்துப் பூங்கொத்து கொடுத்தார். பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு, `தைரிய லட்சுமி' என்று புகழாரமும் சூட்டினார்

2004. மக்களவைத் தேர்தலில், பா.ம.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்தார். டெல்லி தேர்தல் ஆணையத்திலும் நேரடியாக சென்று புகார் கொடுத்தார். ஆனால், புதுச்சேரி உட்பட போட்டியிட்ட 6 இடங்களிலும் வெற்றிபெற்றது பாமக.

2008. அஜித் ஒரு மேடையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில், ``நிகழ்ச்சிகளில் எங்களையும் கலந்துக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க. மிரட்டுறாங்க." என்று பேசினார். கலைஞர் அருகில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த், உடனே எழுந்து நின்று அஜித்தின் பேச்சை வரவேற்று கைதட்டினார்.

2017, மே மாதம். தன் ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினிகாந்த்!  ``நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது" என்று மீண்டும் குழப்பினார். இருந்தும் `சிஸ்டம் கெட்டுப்போச்சு', `போர் வரும்போது பாத்துப்போம்' என்றார்.

2017, டிசம்பர் 3பு-ஆம் தேதி, ரசிகர்கள் எதிர்பார்த்தது கடைசியில் நடந்தே விட்டது. ``இது காலத்தின் கட்டாயம்... வரப்போகிற சட்டமன்றத் தேர்தல்ல தனிக் கட்சி ஆரம்பிச்சு, 234 தொகுதியிலேயும் நாம போட்டியிடுறோம்" என்று அறிவித்தார்.

2018, சேப்பாக்கத்தில் நடைபெற்ற காவிரி மீட்புப் போராட்டத்தின்போது போலீஸார் சிலர் தாக்கப்பட்டபோது, ``வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறை கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்" என்று அவர் ட்வீட் பதிவிட்டார்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நடந்தவுடன் முதலில் ``தமிழகஅரசே பொறுப்பு'' என்று அரசை விமர்சித்தார். தூத்துக்குடியிலிருந்து சென்னைத் திரும்பியதும் ``மக்கள் எல்லாத்துக்கும் போராட்டம் போராட்டம்னு போனா... தமிழ்நாடு சுடுகாடா மாறிடும்" என்று தெரிவித்தார்.

2019. "என் மேல் பாஜக சாயம் பூசப்பார்க்கிறார்கள். திருவள்ளுவர் மேல் காவி சாயம் பூசுவது போல் என்மேல் பூசவும் முயற்சி செய்கிறார்கள். திருவள்ளுவரும் சிக்கமாட்டார், நானும் சிக்கமாட்டேன்” என்றார்.

2020, ஜனவரி. தந்தை பெரியார் பற்றி துக்ளக் விழாவில் பேசியது சர்ச்சை ஆனது. “ நான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்கமாட்டேன்” என ஆவேசமாக மறுத்தார்

2020 பிப்ரவரி. “குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஏற்கனவே கூறியுள்ளனர். இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் கிடையாது அப்படி அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றால் நான் அவர்களுக்கு முதல் ஆளாக குரல் கொடுப்பேன்,’’ என குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாகப் பேசினார்.

மார்ச், 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com